Header Ads

test

யாழில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு நேர்ந்த துயரம்.

 யாழில் பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 70 வயதான நபரை 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லியடி கரணவாய் - குருக்கள் பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் அரச உத்தியோகத்தருக்கே இவ்வாறு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகின்றது.

குறித்த பெண் தினமும் பஸ் நிலையத்திற்கு செல்லும்போது கை மற்றும் வாய் செய்கைகள் மூலம் குறித்த நபர் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


 

No comments