மின் துண்டிப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.
எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து மின் துண்டிப்பு இடம்பெறும் என வெளியாகிவரும் செய்தி குறித்து அமைச்சர் காமினி லொக்குகே கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் , ஜனவரி மாத மத்தியிலிருந்து மின்சாரத் துண்டிப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
இவ்வாறான தகவல்கள் மூலம் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை என தெரிவித்த அமைச்சர், வருடம் முழுவதும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க மின்சார சபைக்கு திறன் உண்டு எனவும் கூறினார்.
Post a Comment