புலிகள் புதைத்த தங்கத்தை தேடியவர்களுக்கு தகரத்துண்டே எஞ்சியது.
முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்கத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்ததின் போது புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட இடமான முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் அகழ்வு நடவடிக்கை கடந்த வாரம் இடம்பெற்றது.
குறித்த அகழ்வுப் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்கனவே இரண்டு குழிகள் தோண்டப்பட்டு நீர் நிரம்பிய நிலையில் காணப்பட்டிருந்தது. அந்த இடத்தில் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற போது தங்க நகைகள் எவையும் கிடைக்கவில்லை.
குறித்த குழியிருந்து கிடைத்த தகரத்துண்டு, உரப்பை, கயிறு போன்ற பொருட்களை நீதிமன்றில் பாரப்படுத்துமாறும் அகழ்வுப்பணிக்கு முன்னர் அந்த இடத்தில் அகழ்வு செய்தவர்கள் தொடர்பில் விசாரித்து அறிக்கையிடுமாறு புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
Post a Comment