மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு.
மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட பிரபல தனியார் விடுதிக்கு அருகாமையில் உள்ள உப்போடை வாவி பகுதியிலிருந்தே உருக்குலைந்த நிலையில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் உருக்குலைந்த நிலையில் இருக்கின்ற காரணத்தினால் அடையாளம் காணமுடியாத நிலையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment