யாழ் கடற்கரையில் கரை ஒதுங்கும் மனித சடலங்கள் - அச்சத்தில் மக்கள்.
யாழ்.வடமராட்சி, சுப்பர்மடம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று கரையொதுங்கியுள்ளது.
கடந்த ஆறு நாட்களுக்குள் யாழ். குடாநாட்டு கடற்பரப்பில் அடையாளம் தெரியாத ஐந்து ஆண்களின் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை பொதுமக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு - மணற்காட்டுப் பகுதியிலும் வடமராட்சி - வல்வெட்டித்துறைப் பகுதியிலும் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவுப் பகுதியில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி பகுதியில் செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை பிற்பகல் வடமராட்சி - சுப்பர்மடம் கடற்கரையில் இனம்தெரியாத சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
Post a Comment