சற்று முன்னர் முகமாலை பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து.
ஏ 9 வீதியில், பளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் சற்றுமுன் விபத்தொன்று சம்பவித்துள்ளது.
யாழ். நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென, பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த கயஸ் ரக வாகனத்தில் மோதியுள்ளது.
இதனையடுத்து கயஸ் ரக வாகனத்தின் பின்னே வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாடை இழந்து ஏ9 வீதியருகே கவிழ்ந்துள்ளது.
இவ்வாறு அடுத்தடுத்து இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment