Header Ads

test

இலங்கை கடற்கரையில் மேலும் ஒரு ஆணின் சடலம் மீட்பு.

 பேருவளை காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் நேற்று (3) காலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேருவளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

சடலத்திற்கு அருகில் ஒரு வெற்றிலையில் பல சுண்ணாம்புகள் இருந்ததை அவதானித்ததாக பேருவளை காவல் அதிகாரி தெரிவித்தார்.

காவல்துறை குற்றப் பிரிவு அதிகாரிகள் மற்றும் நீதவான் சடலம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பணத்தின் கடற்கரைகளிலும் கடந்த 06 நாட்களில் ஆறு சடலங்கள் கரையொதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments