Header Ads

test

ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் சடலத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

  டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட பெண் டயகம 5 ஆம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என தெரியவந்துள்ளது.

குறித்த ஆற்றில் உடலம் இருப்பதை அவதானித்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குறித்த பெண் நீரில் அடித்து சென்று உயிரிழந்தாரா அல்லது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா இல்லையெனில் எவரேனும் கொலை செய்து அவரை ஆற்றில் வீசியுள்ளார் என பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   


No comments