அதிகாலையில் நடந்தேறிய மனதை உலுக்கும் கோரச் சம்பவம்.
திராய்மடு புகையிரத தண்டவாளத்தில் ரயிலுடன் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் இன்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான கந்தையா அசோக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து குறித்து தெரியவருவதாவது,
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி அதிகாலை 5.45 மணிக்கு சென்ற ரயிலுடன் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன், ஆரம்ப விசாரணைகளின் படி அதே நபர் மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு.போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment