தாதியர் ஒருவருடன் தகாத முறையில் நடந்துகொண்ட நபர் கைது - முல்லைத்தீவில் சம்பவம்.
முல்லைத்தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்ட தாதி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் முல்லைத்தீவு - மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் வைத்தியசாலையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
தகாத முறையில் நடந்து கொண்ட நபர் கைது செய்யப்பட்டு, நேற்று (24) முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Post a Comment