Header Ads

test

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் சந்தேக நபர் வழங்கிய வாக்கு மூலம்

 கிளிநொச்சியில் காணாமல் போன பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் வாழ்ந்த பெண் நேற்று மாலை காணாமல் போயிருந்தார். இந்த நிலையில், உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தபுரம் பரம்பாலம் பகுதியிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் பொதியொன்றில் பொதி செய்யப்பட்டு, வீசப்பட்ட நிலையிலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொலையாளி மற்றுமொரு நபரின் உதவியுடன், மோட்டார் சைக்கிளில் சடலத்தை எடுத்து சென்று வீசியதாக குறித்த இளைஞன் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

கிளிநொச்சி - அம்பாள்கும் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன. சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments