லிட்ரோ நிறுவனத்திற்கு நுகர்வோர் அதிகார சபை விடுத்துள்ள உத்தரவு.
லிட்ரோ நிறுவனத்திற்கு நுகர்வோர் அதிகார சபை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதனடிப்படையில், விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பயன்படுத்தப்படாத அனைத்து உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 04 ஆம் திகதிக்கு முன்னர் மீளப்பெறப்படவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
அதற்கமைய பழைய பொலித்தீன் சீல் உள்ள பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்களுக்கு பதிலாக புதிய பொலித்தீன் சீலுடன் கூடிய சிலிண்டர்களை விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, தற்போது வீடுகள் மற்றும் விற்பனை முகவர்களிடம் உள்ள பழைய பாதுகாப்பு பொலித்தினுடன் கூடிய சிலிண்டர்களுக்கு பதிலாக புதிய சிலிண்டர்களை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment