நான்கு வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.
வவுனியா அண்ணாநகர் பகுதியில் தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி நான்கு வயது பெண் குழந்தை பரிதாபமாக பலியாகியுள்ளது.
குழந்தை தொட்டிலில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக கயிறு கழுத்தில் இறுகியதில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்தது.
சம்பவத்தில் பரமேஸ்வரன் அருட்சிகா என்ற நான்குவயது குழந்தையே உயிரிழந்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment