ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி நேற்று (03) பிற்பகல் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அபுதாபியில் நடைபெறவுள்ள 5ஆவது இந்திய சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய (Gotabaya Rajapaksa) இந்த விஜயத்தை மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாநாடானது அபுதாபியில் இன்றும் (04) நாளை மறுதினமும் (05) இடம்பெறவுள்ளது.
இதேவேளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சாதாரண பயணிகள் முனையத்தில் ஜனாதிபதி கோட்டாபய அங்கு பயணிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மேலும், இந்திய சமுத்திர பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பரவலாகப் பயன்படுத்தப்படும் பிற நாடுகளின் பொதுவான பிரச்சினைகள் மற்றும் அபிலாசைகள் தொடர்பில் விவாதிக்க ‘இந்திய சமுத்திர மாநாடு’ 2016 இல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment