Header Ads

test

மீண்டும் ஒரு முறை இலங்கைக்கு சங்கூதிய சீனா.

 சேதன பசளை இறக்குமதி தொடர்பில் முரண்பாட்டு நிலை உருவாக்கியுள்ள சீன உர நிறுவனம் இலங்கை மீதான அழுத்தங்களை தீவிரப்படுத்தியுள்ளது.

நாடு பெரும் பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கி வரும் நிலையில், குறித்த சீன நிறுவனம் இலங்கையிடமிருந்து நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே சீனாவின் Seawin Biotech நிறுவனத்திற்கு உர இறக்குமதி குறித்தான முரண்பாட்டை தொடர்ந்து 6.7 மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்கத் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தினை ஈடு செய்யும் நோக்கில் இலங்கைக்கு எதிராக சீன நிறுவனம் போர்க்கொடி தூக்கியுள்ளது. இலங்கை தொடர்பில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் முறைப்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு பொருட்களை அனுப்பி வைக்க முன்னதாக அவற்றுக்கான பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு சீன நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments