Header Ads

test

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி விடுதலை.

  மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மத குழுக்களுக்கு இடையே பகைமையை தூண்டிய குற்றச்சாட்டு காரணமாக 8 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இன அல்லது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தும் வகையிலும் பிரதிவாதி இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பதை நிரூபிக்க வாதிகள் தவறிவிட்டனர் என தீர்ப்பை அறிவிக்கும் போது நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.    


No comments