நான்கு பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனை.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற ஆசிய பளு தூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீராங்கனை ஷெனுகி திஷாலயா (Shenuki dishalaya) 47 கிலோ எடைப்பிரிவில் 4 தங்கப் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
டெட் லிஃப்ட், பெஞ்ச் பிரஸ் மற்றும் ஸ்குவாட் ஆகிய மூன்று போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றதுடன் ஒட்டுமொத்த தங்கப் பதக்கத்தையும் ஷெனுகி திஷாலயா வென்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், அவர் தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். இந்தப் போட்டியை ஆசிய பளு தூக்கல் கூட்டமைப்பு, துருக்கிய பளு தூக்கல் கூட்டமைப்புடன் இணைந்து நடத்துகிறது.
19 நாடுகள் பங்கேற்கும் ஆசிய பளு தூக்கல் சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் டிசம்பர் 24 திகதி ஆரம்பமான நிலையில் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment