Header Ads

test

பாடசாலைகளுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறை தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

 எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறையில் தற்போது மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு வழங்கப்படவிருந்த குறித்த விடுமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சற்று முன்னர் அறிவித்துள்ளது.

முன்னதாக எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு முன்னிட்டு விடுமுறை வழங்க கல்வியமைச்சினால் தீர்மானிக்கப்பட்டது. எனினும் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 2 ஆம் திகதி வரை குறித்த விடுமுறையை நீடிக்கக் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, 2022 ஜனவரி 3 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments