Header Ads

test

நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை லிட்ரோ எரிவாயு விநியோகத்திற்கு தடை.

 நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண (Lasantha Alagiyawanna) அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை லிட்ரோ எரிவாயு நிறுவனமும் வெளியிட்டுள்ளது.

இதன்படி நேற்று முதல் மறு அறிவித்தல் வரை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, இது தொடர்பில் லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ. கே. வேகபிடிய வெளியிட்டுள்ள தகவலின் படி, நுகர்வோர் விவகார அதிகார சபையோ அல்லது அமைச்சோ அவ்வாறான எந்த அறிவித்தலையும் தமது நிறுவனத்திற்கு வழங்கவில்லை. 

எனவே, தமது நிறுவனத்தின் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


No comments