Header Ads

test

திரைப்பட நடிகையாக விருது பெற்றிருக்கும் பழம்பெரும் பாடகி.

இலங்கை தமிழ் சினிமா பரப்பில் தற்போது பேசுபொருளாக மாறிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

 உலக சர்வதேச திரைப்பட விழாக்களில் பலவற்றில் இது பயணித்துக் கொண்டிருக்கின்றது. கடந்த  வாரம் இலங்கைத் தமிழ் சினிமா பரப்பில் ஒரு வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தி இருக்கின்றது. 72 வயது கடந்த நிலையில் கலைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கும் ஈழத்தின் பழம்பெரும் பாடகியான திருமதி பார்வதி சிவபாதம் அவர்கள் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான சர்வதேச விருது ஒன்றை பெற்றிருக்கின்றார்.

அந்தமான் நிக்கோபார் இன் சர்வதேச திரைப்பட விழாவில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகை விருதை இவர் பெற்றிருக்கின்றார்.

அதேநேரம் இதே திரைப்படம் இந்தியாவில் இடம்பெறும் உருவட்டி திரைப்பட விழாவில் ஐந்து சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது.

சிறந்த இயக்குனர் , சிறந்த கதாசிரியர்,  சிறந்த தயாரிப்பாளர்,  சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த சுவர் படம் ஆகியவற்றிற்காக விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை இத்திரைப்படம் 9 சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கின்றது.

தயாரிப்பாளர்களே இல்லாத தளம் ஒன்றில் கிட்டத்தட்ட 3 வருடங்களாக மக்களிடம் இருந்து சேகரித்த பணத்தின் மூலம் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்ததுப. இத்திரைப்படத்தில் 158 நபர்கள் இணைந்து முதலீடு செய்ததன் மூலம் இப்படத்தை உருவாக்கி இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பலரால் அறியப்பட்ட திரைச் செயற்பாட்டாளரான மதிசுதா அவர்களின் மூன்று வருட தொடர்ச்சியான உழைப்பின் மூலம் இப்படத்தை ஐபோன் கைப்பேசியில் உருவாக்கியுள்ளார்.

தமிழ் சினிமா தரப்பின் புதிய ஒரு அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கும் குறித்த குழுவினரின் வளர்ச்சி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை எதிர் காலத்தில் பதித்துகொள்ளும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.



No comments