Header Ads

test

இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரை தீ வைத்து எரித்து கொலை செய்த பாகிஸ்தானியர்கள்.

 பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட போது, அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் அங்கிருந்த நபர் ஒருவர் செல்பி எடுத்த புகைப்படம் வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் சியால்கோட் நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்த கொழும்பைச் சேர்ந்த பிரியந்த தியவதன (Priyantha diyawadana) என்பவர் அங்கிருக்கும் தொழிற்சாலை ஊழியர்களால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டு அதன் பின் எரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த கொடூர சம்பவம் இலங்கை மக்களிடையே மட்டுமின்றி, உலகில் இருக்கும் பலருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் (Imran Khan) இது ஒரு அவமானகரமான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சமூகவலைத் தளங்களங்களில் Sialkot சம்பவம் தொடர்பான் புகைப்படம் மற்றும் காணொளிகள் வெளியாகி வருகின்றன. அதில் பாகிஸ்தானியர் என்று நம்பப்படும் ஒருவர் இந்த சம்பவத்தின் போது செல்பி எடுத்துள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் மற்றும் பாகிஸ்தானியர்கள், இஸ்லாமிய மதம் நமக்கு இதை சொல்லிக் கொடுக்கவில்லை, இன்று நாம் ஒரு நாடாக தோற்றுவிட்டோம், இஸ்லாமியர்களாக தோற்றுவிட்டோம், மனிதர்களாக தோற்றுவிட்டோம், பிரியந்த தியவதன எங்களை மன்னித்துவிடுங்கள் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.


No comments