Header Ads

test

புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தலுக்கான வயதெல்லை தொடர்பில் வெளிவந்த தடை.

 புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச வயதெல்லை அடுத்த வருடம் 21ல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் (NATA) தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை சட்டத்தை 2022ம் ஆண்டு திருத்துவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், குறித்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என அவர் ஊடகங்களுக்கு இன்று தெரிவித்தார்.

புகையிலை மற்றும் மதுபானச் சட்டம் திருத்தப்பட்டவுடன் வேறு பல மாற்றங்களும் செய்யப்படும்,என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய சட்டத்தின்படி, புகையிலை விளம்பரம் மற்றும் அனுசரணை ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.

புதிய சட்டத்தின் கீழ் புகையிலை பொருட்கள் தொடர்பாக எல்லை தாண்டிய விளம்பரங்களை தடைசெய்வோம் என நம்புகிறோம், என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சமூக ஊடகங்கள் உட்பட இணையத்தில் பரவி வரும் புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் நீக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 2006 இல் நிறைவேற்றப்பட்ட புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை சட்டம் இலங்கையில் புகையிலை கட்டுப்பாட்டை நிர்வகிக்கும் சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments