வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு பிரத்தியேகமான சலுகை ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பண்டிகைக் காலத்தில் அவர்களுக்கான விசேட சலுகையை வழங்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களினால் டிசம்பர் மாதத்தில் இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும் ஏனைய முறைசார் வழிகள் ஊடாக இலங்கை ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு டொலருக்கும் 10 ரூபாவை மேலதிகமாகப் பெற்றுக் கொடுக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment