Header Ads

test

பஸ் கட்டணம் தொடர்பில் நாளை வெளியாகவுள்ள தகவல்.

 பஸ் கட்டண திருத்தம் தொடர்பான இரகசிய அறிக்கை ஒன்று, இன்று போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதிய பஸ் கட்டணக் கட்டமைப்பு நாளை போக்குவரத்து அமைச்சரினால் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். இதேவேளை, நாட்டில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேவேளை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாகவும் பொதுமக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பஸ்களின் பயணக்கட்ட அதிகரிப்பு மக்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்குமா என்பது நாளை வெளியாகவுள்ள அறிவிப்பிலேயே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments