Header Ads

test

நேருக்கு நேர் இரு வாகனங்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட பாரிய விபத்து.

 நானுஓயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நானுஓயா பங்களாஅத்த பகுதியிலேயே இன்று காலை 9 மணியளவில் கனரக வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹங்குராங்கெத்த ஹேவாஹெட்ட பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றும் தலவாக்கலை பகுதியில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சென்ற கனரக வாகனம் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த கனரக வாகனத்தின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளன.

லொறியின் சாரதி நுவரெலியா காவல் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.







No comments