அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி.
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் முல்லிப்பொத்தானை 96வது மைல் கல் பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இரு பார ஊர்திகள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. சீமெந்து ஏற்றிக்கொண்டு ஒரு திசையிலிருந்து வந்த பார ஊர்தி ஒன்றும் சல்லிக் கற்களை ஏற்றியவாறு மறு திசையிலிருந்து வந்த டிப்பர் ரக வாகனமொன்றுமே நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சீமெந்து ஏற்றிவந்த பார ஊர்தியின் சாரதி உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment