Header Ads

test

ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் தொடர்பில் வெடித்தது சர்ச்சை.

 Omicron வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் வெளிநாடு சென்று, மீண்டும் நாட்டுக்கு வந்தமை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்டிருக்கவில்லை என்றாலும், அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் குறித்த பெண் வெளிநாட்டுக்கு சென்றமை, மீண்டும் நாட்டுக்கு வருவதற்கு பயன்படுத்திய முறை தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, Omicron வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் தடுப்பூசி அட்டை இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்று வந்தமை தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளே பொறுப்புக் கூற வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments