முல்லைத்தீவு - மூங்கிலாற்றில் சிறுமி உயிரிழப்பில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
மூங்கிலாறு கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி காணாமல் போன 13 வயது சிறுமி 18 ஆம் திகதி உடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சிறுமியின் அத்தான் கடந்த 22.12.21 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்டப்ட போது எதிர்வரும் 04.01.2022 திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸார் சிறுமியின் கொலை தொடர்பில் தாய், தந்தை,சிறுமியின் அக்கா ஆகியோர் கடந்த 23.12.21 அன்று புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய 48 மணித்தியாலங்கள் பொலிஸ் தடுப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று சந்தேக நபர்கள் மூவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 04.01.2022 வரை விளக்கமயியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலிஸார் சந்தேக நபர்கள் மூவரையும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா இவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றார்கள்.
Post a Comment