கொழும்பில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல்.
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் உள்ள படகுத் துறையில் ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
அதேவேளை தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
Post a Comment