Header Ads

test

நாட்டில் தொடரும் கொவிட் மரணங்கள்.

 இலங்கையில் மேலும் 20 கொவிட் மரணங்கள் நேற்று (23) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,852 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 08 பெண்களும் 12 ஆண்களும் உள்ளடங்குவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 323 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 558,850 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments