நத்தார் தின நினைவு முத்திரை பிரதமர் தலைமையில் வெளியீடு.
நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக் தலைமையில் இன்று அலரி மாளிகையில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து டளஸ் அழகப்பெருமவினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
45 ரூபாய் மற்றும் 15 ரூபாய் பெறுமதியான முத்திரைகளே இவ்வாறு வெளியிடப்பட்டன.
சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவில் முத்திரை வடிவமைப்பு போட்டியில் வெற்றிபெற்ற கந்தானை புனித செபஸ்தியன் மகா வித்தியாலயத்தின் நிமேஷ் சமத் பெரேரா மாணவன் மற்றும் நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் ஷினாலி ருவண்யா பீரிஸ் மாணவி ஆகியோரின் சித்திரங்களை கொண்டு இம்முறை நத்தார் தின நினைவு முத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேடம்சமாகும்.
Post a Comment