சிறுவர்களுக்கான கணணி விளையாட்டுக்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.
சிறுவர்களின் மனதை சிதைக்கும் கணனி விளையாட்டுகளை தடை செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் இணைந்து அரசாங்கம் செயற்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார(Nalin Bandara) கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கணி விளையாட்டுகள் மூலம் பல சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இவ்வாறான கணனி விளையாட்டுக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment