Header Ads

test

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக மயிலிட்டியில் வெடித்த போராட்டம்.

  மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வலி. வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய்,கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொட்டும் மழையிலும் கடற்தொழிலாளர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.




No comments