கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து.
கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் இன்று காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ள நிலையில் தெய்வாதீனமாக உயிர்தேசம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கன்டர் வாகனம் சிறிய ரக பிக்கப் வாகனத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு சென்று இயக்கச்சி பாற்பண்ணை நோக்கித் திரும்ப முற்பட்டபோது பின்னால்வந்த குளிரூட்டப்பட்ட தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து கன்டருடன் மோதியதில் விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் குளிரூட்டப்பட்ட பேருந்தும், கன்டர் வாகனமும் கடும் சேதங்களுக்கு உள்ளானபோதும் தெய்வாதீனமாக உயிரிழப்புக்களோ, காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிய வருகின்றது.
மேலும் சம்பவத்தால் மேற்படி பகுதியில் ஏ-09 வீதியுடனான போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment