புலம்பெயர் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு, புலம்பெயர் மக்களுடன் புரிந்துணர்வுடன் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ(Gotabaya) தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கெரன் அன்ட்ரூஸ் (Karen Andrews) உடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்ததாக அரச தலைவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்புகளைப் பயில விரும்பும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பொருத்தமான பாடநெறிகளின் ஆரம்பக் கட்டத்தை இலங்கையில் தொடர்வதற்குத் தேவையான கல்வி நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சுடன் இணைந்து தொழில் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 12 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பசுமை விவசாயம் தொடர்பான இலங்கையின் கொள்கையைப் பாராட்டிய அமைச்சர், அவுஸ்திரேலியாவும் நிலைபேறான விவசாயத்தில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
Post a Comment