Header Ads

test

குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு.

 கொக்கட்டிச்சோலை கற்சேனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொக்கட்டிச்சோலை பகுதியில் 41 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டவர் முருகப்பன் லோகிதன் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 



No comments