பிரியந்த குமாரவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது.
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவரின் கொலை சம்பவத்தில் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் பெயர் பில்லி என்றும் அவரை ராவல்பிண்டி நகரம் நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த சமயத்திலே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சமபவம் தொடர்பிலான 8 சந்தேக நபர்களையும் நேற்று பாகிஸ்தான் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரியந்த குமாரவின் சடலம் இன்று அதிகாலை கனேமுல்லையிலுள்ள அவரின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நாளைய தினம் கனேமுல்ல பொல்ஹேன பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment