Header Ads

test

லண்டனிலிருந்து கிளிநொச்சிக்கு வருகை தந்தபெண்ணை கொலை செய்த சந்தேக நபர் வழங்கிய மேலும் பல அதிர்ச்சி வாக்குமூலம்.

 போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் அதற்கான பணத்திற்காகவே லண்டனில் இருந்து வந்த வயோதிப பெண்ணை கொலை செய்ததாக கிளிநொச்சி பெண்ணின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சங்கேத நபரான இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே சந்தேகநபர் இதனை தெரிவித்துள்ளார். ஓட்டுத்துண்டுகளை துணியில் சுற்றி குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கைதான சந்தேகநபர் நபர் கூறியுள்ளார்.

அதேவேளை கைதானவரிடம் இருந்து 2 சோடி காப்புக்கள், தங்க சங்கிலி உட்பட்ட ஆபரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

நேற்றையதினம் கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய 67 வயதான பெண் காணாமல் போன நிலையில் சடலம் பொதியொன்றில் பொதி செய்யப்பட்டு, வீசப்பட்ட நிலையிலேயே கண்டெடுக்கபட்டிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments