Header Ads

test

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் வெடி மருந்துடன் உள் நுழைந்த வாகனம் - அதிரடியாக கைது செய்யப்பட்ட சாரதி.

  கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் 25 கிலோ வெடி மருந்துடன் நுழைய முற்பட்ட சாரதியொருவர் விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பொற்றாசியம் - பெர்குளோரைட்டு எனப்படும் மருந்தை எடுத்துச்சென்றதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தான் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்காகவே அவற்றை அனுமதியுடன் கொண்டு வந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


No comments