இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி.
இன்று அதிகாலை கொட்டாவையில் இருந்து மத்தல வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து பரட்டுவ மற்றும் கபுதுவ ஆகிய இடங்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
மத்தல நோக்கி பயணித்த பாரவூர்தி அதிவேக நெடுஞ்சாலையில் கவனக்குறைவாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதே திசையில் வந்த பௌசர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியில் மோதியுள்ளது.
இதில், பாரவூர்தியில் பயணித்த கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்தோடு பௌசர் வாகனத்தின் சாரதியான 61 வயதுடைய நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
மேலும் பௌசர் வாகனத்தின் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment