இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மஹேல ஜயவர்தன - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புகைப்படம்.
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பு ஆலோசகரும், முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்தன முன்னாள் மனையை பிரிந்திருந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மஹேல ஜயவர்தன , சிறிலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் ஊழியரான நடாஷா மகலந்தவை அண்மையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணம் அண்மையில் மிக எளிமையான முறையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
இதேவேளை மஹேல- முன்னாள் மனைவி கிறிஸ்டினா கருத்து வேறுபாடு காரணமாக 2018 இல் விவாகரத்து செய்து கொண்டனர். மஹேல- கிறிஸ்டினா தம்பதிகளிற்கு 8 வயதான மகள் உள்ள நிலையில், அவர் தாயின் பராமரிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment