வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் சிறுமி ஒருவர் உடல் கருகி பலி.
மாத்தறை - வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
வீட்டிலுள்ள அறையொன்றில் பரவிய தீயினால், வீட்டின் கூரை உடைந்து வீழ்ந்துள்ளது. இதன்போது, வீட்டிலிருந்த 8 வயதுச் சிறுமி, தீக்கிரையாகியுள்ளார்.
தீ பரவும் சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த குறித்த சிறுமியின் பாட்டி மற்றும் சகோதரி ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் பரவிய தீயை வெலிகம காவல்துறையினர் மற்றும் மாத்தறை தீயணைப்பு பிரிவினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் வெலிகம காவல்துறையினர் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment