Header Ads

test

டக்களஸ் தேவானந்தாவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

 தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போதைவஸ்து கடத்தியவர் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்திற்கு கரைச்சி பிரதேச சபையில் கண்டன தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விடுதலைப்புலிகளின் தலைவர் போதைவஸ்து கடத்தியவர் என்றும் விற்பனையில் ஈடுபட்டவர் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்ட நிலையில் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள், கறுப்பு கொடி காட்சிப்படுத்தி கண்டன பிரேரனை ஒன்றை முன் வைத்திருந்தனர்.

குறித்த பிரேரனைக்கு பல கட்சி சார்ந்தவர்களும் ஆதரவளித்திருந்தனர். டக்ளஸ் தேவானந்தா தான் கூறிய கருத்திற்கு மக்கள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனடிப்படையில் குறித்த கண்டன பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.


No comments