நாட்டில் ஏற்பட்டுள்ள மீண்டுமொரு படகு விபத்து - ஒருவரை காணவில்லை.
களுத்துறை தெற்கு பொலொஸ்சாகம படகுத்துறையில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந் நிலையில் களுத்துறை கல்பாத துறையில் இருந்து படகு வந்ததாகவும், அதில் ஐந்து பேர், மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிள் இருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
படகு கவிழ்ந்ததில், சம்பவ இடத்தில் இருந்த ஒரு குழுவினரால் நான்கு பேர் மீட்கப்பட்ட நிலையில், மூன்று மோட்டார் சைக்கிள்களும் சைக்கிளும் நீரில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தோடு படகின் சாரதி படுகாயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை காணாமல் போனவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், அவரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த சில தினங்களின் முன்னர் மட்டக்களப்பி கிண்ணியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment