நாட்டில் புகையிரதத்தில் பயணிப்பவர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி.
நாட்டில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டாலும், புகையிரத கட்டணங்கள் தற்போதைக்கு அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
மேலும், பொருட்களின் விலைகள் அதிகரித்து மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வரும் இவ்வேளையில் புகையிரத கட்டணத்தில் திடீர் திருத்தத்தை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கட்டண உயர்வால் பேருந்து சங்கங்கள் பேருந்து கட்டணத்தை 17% அதிகரிக்க வேண்டியிருந்தாலும் எக்காரணம் கொண்டும் புகையிரத கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment