ஈழத்து பெண்ணுக்கு ஐ.நா சபையில் கிடைத்துள்ள கெளரவம்.
யுனிசெஃப் இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து பெண் செல்வி. G.சாதனா (G. Sadhana) தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் Tamil Diaspora Alliance சார்பாக உரையாற்றுகிறார்.
Tamil Diaspora Alliance என்ற அமைப்பை புலம் பெயர் சமூகங்களின் இளைய தலைமைத்துவ அமைப்பாக இந்த சர்வதேச மாநாட்டுக்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) அழைப்பு விடுத்திருக்கிறது.
மேலும், இந்த சர்வதேச மாநாட்டில் பிரதிநிதியாக அமைப்பின் செயல் திட்டக்குழு பிரதி இயக்குனர் G.சாதனா (G. Sadhana) கலந்துகொள்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் உட்பட ஐ.நா சபையின் பல அங்கத்துவ அமைப்பின் இயக்குனர்களும் உரையாற்றவுள்ளனர்.
இதேவேளை, புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்று சிறந்த தலைமைத்துவத்திற்காக சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்படுவது இதுவே முதல்முறை என்று தெரியவந்துள்ளது.
Post a Comment