முல்லைத்தீவில் யானை தாக்கியாதில் நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.
முல்லைத்தீவில் கூழாமுறிப்பு பகுதியில், வீதியால் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை காட்டு யானை தாக்கியதில் குறித்த நபர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
இச்சம்பவம் முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
கூழாமுறிப்பிலிருந்து கெருடமடு செல்லும் வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த வயோதிபர் மீது வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த காட்டு யானை தாக்கியுள்ளது.
இதன்போது துவிச்சக்கர வண்டியை தூக்கி வீசியுள்ளது, அத்துடன் முதியவரும் காயமடைந்துள்ள நிலையில் யானை அவருடைய துவிச்சக்கர வண்டியை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. அவர் சத்தமிட்டதுடன் கிராமத்தவர்கள் சென்று யானையை விரட்டியுள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதிகளில் காட்டு யானையால் மக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் உள்ளதோடு, கடந்த வாரத்தில் கெருடமடு பகுதியைச் சேர்ந்த ஒருவரும் யானைத்தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், இவற்றை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Post a Comment