Header Ads

test

86 வருடங்களின் பின் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இடம்பெற்ற அதிசயம்.

 தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் 86 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள் தற்போது பொதுமக்களின் பார்வைக்காக விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 22 ஆம் திகதி பிறந்த இந்த அன்னப் பறவைகள், கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் பார்வைக்கு விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவுக்கு மட்டுமே உரித்தான இந்த ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள் தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வசித்து வருகின்றன.

தற்போது புதிதாகப் பிறந்த அன்னப் பறவைகளில் மூன்று ஆண் பறவைகளும், இரண்டு பெண் பறவைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments