Header Ads

test

கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 71 மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை.

கிளிநொச்சி கண்டாவளை தருமபுரம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கான கண் பரிசோதனை கடந்த நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த பாடசாலையில் 370 மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில், பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நாளன்று 320 மாணவர்கள் சமுகமளித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களுக்கான கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 71 மாணவர்களுக்கு கண் பார்வைக்குறைபாடு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அதிக தொலைபேசி பாவனை காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் வைத்தியர்கள் தெரிவித்ததினையடுத்து 71 மாணவர்களும் இன்றையதினம் மேலதி்க கண்பரிசோதனைக்காக அழைக்கப்பட்டு கண்ணாடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments