யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் - 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.
யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 5 மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியின்றி இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களிடேயே இடம்பெற்ற துடுப்பாட்ட சுற்றுப் போட்டியில் மோதலொன்று ஏற்பட்டது.
இதனையடுத்து இதில் தலையிட்ட கோப்பாய் காவல்துறையினர் நிலைமையை சுமுகமாக்கிய போதும், நேற்று ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த குறித்த மாணவர்கள் தங்களுடையே மதுபோதையில் முரண்பட்டுக் கொண்டதனால் 5 மாணவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுமுறை நேரத்தில் இந்த நிகழ்விற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்காத போதும் காவல்துறையினரின் அனுமதி பெற்று பெரும்பான்மையின மாணவர்கள் நிகழ்வை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment